மேலும் செய்திகள்
'அ' குறுமைய தடகளம் மாணவர்கள் அமர்க்களம்
19-Aug-2024
அசத்தலான ஆட்டம் sports covai
12-Aug-2024
கோவை;கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், தெற்கு குறுமைய தடகள விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்கள் நடந்தன.நேரு ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில், தெற்கு குறுமையத்திற்கு உட்பட்ட, 35 பள்ளிகளை சேர்ந்த, 1,500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இரு பாலருக்கும், 14, 17, 19 வயது என மூன்று பிரிவுகளின் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன.இதில், 100 மீ., முதல், 1,500 மீ., வரையிலான ஓட்டம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.நிறைவில், மாணவர்களுக்கான ஒட்டு மொத்த 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை, இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியும், இரண்டாமிடத்தை குனியமுத்துார் அரசு உயர் நிலைப்பள்ளியும், மூன்றாமிடத்தை நிர்மல மாதா பள்ளியும் பிடித்தது.மாணவிகளுக்கான ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' கோப்பையை, கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி கைப்பற்றியது.இரண்டாவது இடத்தை ஈக்விடாஸ் பள்ளியும், மூன்றாவது இடத்தை வி.எல்.பி., பள்ளியும் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
19-Aug-2024
12-Aug-2024