உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வடவள்ளி:கோவை சட்ட கல்லூரி வளாகத்தில், புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, சட்டக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்தின் முன்பு, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், இந்த மூன்று சட்டங்களும், போலீசாருக்கு ஆதரவாகவும், மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் உள்ளது. இதனை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்களுக்கு ஆதரவளிப்போம் என, கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை