வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
கோவை; வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, கோவையில் நேற்று வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தனர்.மத்திய அரசால் கொண்டு வரப்படும், வழக்கறிஞர்கள் சட்ட திருத்த வரைவு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சட்ட திருத்த மசோதா திரும்ப பெற வலியுறுத்தியும், கோவை வக்கீல் சங்கம் சார்பில், நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3,000 க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.