மேலும் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
24-Aug-2024
ஈரோட்டில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
29-Aug-2024
கோவை : மதுரையில் வக்கீல்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வக்கீல்கள் இன்று (13ம் தேதி) கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.மதுரை குடும்ப நல நீதிமன்ற கவுன்சிலிங் சென்டரில், வக்கீல்கள் பாலமுருகன், குமரன் ஆகியோர் ஆஜராக சென்றனர். அப்போது, திருப்பதி என்பவர், வக்கீல் இருவரையும் தாக்கி காயப்படுத்தியதாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்யவில்லை.வக்கீலை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தியும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரியும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜேக்) சார்பில் இன்று ஒரு நாள் நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். 'ஜேக்' அமைப்பு வேண்டுகோள்படி,கோவையிலும் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.
24-Aug-2024
29-Aug-2024