உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிங்கப்பெண்ணே 2025 விருது வழங்கும் விழா

சிங்கப்பெண்ணே 2025 விருது வழங்கும் விழா

கோவை,; கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் கல்வி நிறுவனங்களின் சார்பில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 'சிங்கப்பெண்ணே 2025' விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்வி நிறுவனங்களின் செயலாளர் லாவண்யா தலைமை வகித்தார்.விழாவில் விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், ''பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளனர். மண் முதல் விண்வெளி வரை சாதனைகளை படைக்கும் நிலையில் உள்ள பெண்கள், எதற்கும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. பெண்களாக பிறந்ததற்காக பெருமை கொள்ள வேண்டும். நம் நாட்டு மனித சக்தியில் 48 சதவீத பங்கினை பெண்கள் வகிக்கின்றனர். இருப்பினும், இவை ஒருங்கிணைக்கப்படாத சக்தியாக உள்ளது. முறைப்படுத்தப்பட்டால் பெண்களின் வாழ்க்கை தரம் உயரும். பெண்களின் முன்னேற்றத்துக்கு அரசு பல முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,'' என்றார்.விழாவில், பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் 12 பேருக்கு விருதுகளை, கதிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கதிர் வழங்கினார். இயக்குனர் மிதிலேஷ், விதுபிரதிக்சா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கதிர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கற்பகம் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ