உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிரை முன்னேற்ற மனசு வையுங்களேன்! பெண் தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு 

மகளிரை முன்னேற்ற மனசு வையுங்களேன்! பெண் தொழில்முனைவோர் எதிர்பார்ப்பு 

கோவை : தொழில்நகரமான கோவையில், பெண் தொழில்முனைவோருக்கு பொது வசதி மையம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும், சந்தைப்படுத்துவதில் உதவிகள் வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு தற்சமயம், 17 சதவீதமாக உள்ளது. உலகளவில் இச்சதவீதம், 40 என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் பட்சத்தில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவை எளிதாக எட்டிவிடலாம் என, பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில், நடுத்தர, பெரிய அளவில் உள்ள பெண் தொழில்முனைவோரை காட்டிலும், வீடுகளில் இருந்தும், சிறிய கடைகளை வைத்தும் தொழில் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம். வீடுகளில் இருந்து தொழில்கள் செய்யும் போது, பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக அதிருப்தி எழுந்துள்ளது. இதுகுறித்து, சின்னம்மாள் ராமசாமி அறக்கட்டளை செயலாளர் சரஸ்வதி கூறியதாவது:ஆயிரக்கணக்கான பெண்கள், வீடுகளில் இருந்து உணவு சார்ந்த பல்வேறு தொழில்களை மேற்கொள்கின்றனர். வாடகை வீடு என்பதால் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். உணவு சார்ந்த தொழில்களில் ஈடுபடும் பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு பொது வசதி மையம் அமைத்துக்கொடுக்க வேண்டும். கடன் பெறும் வழிமுறைகளை சற்று எளிமையாக்குவதுடன், சந்தைப்படுத்த மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த பிளாட்பாம் ஏற்படுத்தி உதவ வேண்டும். சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் என்னதான் தரம் இருந்தாலும், பெரிய கமர்சியல் நிறுவனங்களுடன், போட்டியிட முடியாமல் திணறுகின்றனர். இதுகுறித்து, எம்.எஸ்.எம்.இ., நபார்டு வங்கிகளிடம் வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

'வழிகாட்டுதல் மையம் வேண்டும்'

மகளிர் தொழில்முனைவோர் முன்னேற்ற சங்க தலைவர் சுதா புருஷோத்தமன் கூறுகையில், '' சிறிய அளவில் தொழில் செய்யும், பெண் தொழில்முனைவோர்களை அரசு அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வங்கிக்கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பெண்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய, வழிகாட்டுதல் மையம் ஏற்படுத்தி தரவேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை