உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாடகை செலுத்தாத இறைச்சி கடைகளுக்கு சீல்

வாடகை செலுத்தாத இறைச்சி கடைகளுக்கு சீல்

அன்னூர்: வாடகை செலுத்தாத ஆறு இறைச்சி கடைகளுக்கு, பேரூராட்சி 'சீல்' வைத்தது.அன்னூர் பேரூராட்சியில், பஸ் ஸ்டாண்ட், ஓதிமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில், பேரூராட்சி வணிக வளாகங்கள் உள்ளன. இதில் வார சந்தைக்குள், மாட்டு இறைச்சி கடைகள் எட்டு உள்ளன. இதில் ஆறு கடைகள், 11 மாதங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளன.ஆண்டுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய், செலுத்த வேண்டிய கடைகள் தொடர்ந்து வாடகை செலுத்தவில்லை. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் முன்னிலையில், ஆறு கடைகளுக்கு, ஊழியர்கள் சீல் வைத்தனர்.'இதே போல் வாடகை சரியாக செலுத்தாத கடைகளுக்கு, சீல் வைக்கப்படும்' என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை