உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெற வழிமுறை

மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெற வழிமுறை

அன்னுார்;மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெறுவது குறித்து, விவசாயிகளுக்கு, அறிவுரை வழங்கப்பட்டது. காரேகவுண்டன் பாளையம் ஊராட்சி, சாலையூர் கிராமத்தில், 'அட்மா' திட்டத்தில், பண்ணை பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த முதல் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் லோகநாயகி வரவேற்றார். துணை வேளாண் அலுவலர் ராஜன் தலைமை வகித்தார்.காரமடை வேளாண் அறிவியல் நிலைய இளநிலை ஆராய்ச்சியாளர் துரைசாமி பேசுகையில், ஒரு எக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரை கொண்டு சமமாக கடைசி உழவுக்கு முன்பு சீராக இடவேண்டும். அத்துடன் 10 பாக்கெட் (ஒரு எக்டருக்கு இரண்டு கிலோ) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழ வேண்டும். 60 செ.மீ., இடைவெளியில், ஆறு மீட்டர் நீளத்திற்கு பார் அமைக்க வேண்டும்.பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்க வேண்டும். பார் அமைக்காவிட்டால், பத்து அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர் வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம். ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை பின்பற்றினால் அதிக மகசூல் பெறலாம், என்றார். உதவி வேளாண் அலுவலர் கவிதாஞ்சலி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முனுசாமி, பிரபு ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை