உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

போத்தனூர் : கோவைப்புதூர் அடுத்த அறிவொளி நகர், காந்தி சதுக்கத்தை சேர்ந்தவர் சபாங்கிரி, 19; தனியார் நிறுவன ஊழியர். காந்திபுரத்திலிருந்து அறிவொளி நகருக்கு பஸ்சில் பயணித்தார். வேலைப்பளுவால் தூங்கிவிட்டார். பஸ் இடையர்பாளையம் பிரிவு ஸ்டாப்பில் நின்றபோது ஒருவர், சபாங்கிரியின் சட்டை பாக்கெட்டிலிருந்த மொபைல்போனை திருடி, தப்பிக்க முயன்றார். கண்டக்டர் சத்தமிடவும் சபாங்கிரி விழித்துக்கொண்டார். இருவரும் அந்நபரை பிடித்து, குனியமுத்தூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்நபர் குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்த செல்வகுமார், 47 என தெரிந்தது. மொபைல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி