சங்கரா கல்லுாரி வளாகத்தில் மூகாம்பிகை கோவில் கும்பாபிஷேகம்
கோவை;சரவணம்பட்டி, சங்கரா கல்லுாரி வளாகத்தில் அமைந்துள்ள வித்யா மஹா கணபதி, மூகாம்பிகை கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கோவை சரவணம்பட்டியில் உள்ள சங்கர அறிவியல் வணிக கல்லுாரியில் மூகாம்பிகை அம்மன், பரிவார்த்த மூர்த்திகள், வித்யா மஹா கணபதி கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆக.28ல் காலை 9.00 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம். கோபூஜைகள் நடந்தன. 29ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், தீபாரதனை நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் மூகாம்பிகை கோபுர விமான கலசஸ்தாபனம் நடந்தது. மூன்றாம் காலபூஜைகள் நடந்தன. மூகாம்பிகை கோபுர விமான கும்பாபிஷேகம் நேற்று காலை சங்கரா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. அறங்காவலர்கள் வசந்தராமன், பட்டாபிராமன், கல்யாணராமன், சங்கரா கல்லுாரியின் துணை இணை செயலளார் நித்யா ராமச்சந்திரன், இணை செயலாளர் சந்தியா ராமச்சந்திரன், சங்கரா பாலிடெக்னிக் இணை செயலாளர் சாஹித் மற்றும் கல்லுாரி முதல்வர்கள் ராதிகா, கணேசன் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை வடவள்ளி சின்மயாமிஷன் ஞானவிநாயகர் கோவில் மணிக்குமார் சிவம் தலைமையிலான குழுவினர் நடத்தினர்.