வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மை அதை போல ஆண்களையும் பெண்கள் மதிப்பதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும்
கோவை : கோவை பெண் வக்கீல்கள் சங்க, 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மண்டல அளவிலான கருத்தரங்கு, கோவை ரேஸ்கோர்ஸ், காஸ்மோபாலிடன் கிளப்பில் நேற்று நடந்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது:
பெண்கள் எதை வேண்டுமானாலும், செய்து முடிக்கக் கூடியவர்கள். குறுகிய வட்டத்துக்குள் தங்களை அடைத்துக் கொள்ளக்கூடாது.குடும்ப பிரச்னையில் பெண்கள் தான் அதிக தவறு செய்கின்றனர். கணவனுக்கு, மனைவியும், மனைவிக்கு கணவனும், தனி இடம் கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்க, நம் பிள்ளைகளுக்கு அம்மா தான் கற்றுத்தர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், 25 பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வி வைப்பு நிதி வழங்கப்பட்டது. முன்னதாக, கோவை பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் தமிழ்செல்வி வரவேற்றார். தலைவர் மேரிஅப்போலின் தலைமை வகித்தார்.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி விழா மலரை வெளியிட, மூத்த வழக்கறிஞர் நாகசுப்ரமணியம் பெற்றுக் கொண்டார். கோவை பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் அருணாசலம், வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நந்தகுமார், கோவை கிரிமினல் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவர் அய்யப்பன், தமிழ்நாடு பெண் வக்கீல் சங்க தலைவர் சாந்தகுமாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்மை அதை போல ஆண்களையும் பெண்கள் மதிப்பதற்கு கற்றுக்கொடுக்கவேண்டும்