உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டல் பெயரில் பணம் கேட்ட மர்ம நபர்கள்

ஓட்டல் பெயரில் பணம் கேட்ட மர்ம நபர்கள்

கோவை; கோவையின் பல்வேறு பகுதிகளிலும், பிரபல ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் வாட்ஸ்அப் எண், திடீரென மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அந்த எண்ணில் இருந்து பலருக்கும் ஓட்டல் மேலாளர் ஒருவர் பெயரில், பணம் கேட்டு தகவல் அனுப்பப்பட்டது.இதை உண்மை என, நம்பிய பலரும் பணத்தை அனுப்பினர். இந்நிலையில், பணம் கேட்பது குறித்து ஓட்டல் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. ஓட்டல் நிர்வாகம் சார்பில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை