உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி வைபவம்

லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தி வைபவம்

மேட்டுப்பாளையம்:சிறுமுகை சத்தியமங்கலம் சாலையில், சின்னக் கள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கம்பாளையத்தில், யோக வள்ளி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி வைபவம் நடைபெற்றது. இது குறித்து அறங்காவலர் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தில் நரசிம்மர் அவதரித்தார். இதை முன்னிட்டு ரங்கம்பாளையம் விஜய ஸ்கந்தபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில், மூலவர் யோகலட்சுமி சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. புண்யாகவாசனம், விஷ்வசேஷனர் பூஜை, கலச ஆவாஹனம், ஸ்தபன திருமஞ்சனம், ஜெபம் பாராயணம், நரசிம்ம அஷ்டோத்திரம், சாற்று முறை ஆகிய வைபவம் நடைபெற்றது. இவ்வாறு தலைவர் கூறினார். வைபவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காரமடை அரங்கநாதர் கோவில் வெங்கடேஷ் பிரசாத், நிஜந்தன் ஆகியோர் இந்த வைபவத்தை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்