உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய  அளவிலான பிர்ஸ்பீ சென்னை அணிகள் அபாரம் 

தேசிய  அளவிலான பிர்ஸ்பீ சென்னை அணிகள் அபாரம் 

கோவை;தேசிய அளவிலான 'பிர்ஸ்பீ' போட்டியின், முதல் இரண்டு இடங்களையும் சென்னை அணிகள் தட்டி சென்றன. கர்நாடகா அல்டிமேட் பிளேயர்ஸ் சங்கம், நோ பிளை ஜோன் சார்பில் கோவையில் முதல் முறையாக 'சக்கத் அல்டிமேட் ஓபன்' தேசிய அளவிலான பிரிஸ்பீ போட்டி, கோவை பீளமேடு, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானம், சரவணம்பட்டி பர்ஸ்ட் கிக் சாக்கர் பள்ளி, 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 40க்கும் மேற்பட்ட அணிகளை சேர்ந்த சுமார் 600 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஆண்கள் பிரிவில், சென்னை 600098 அணியினர் முதலிடம், டீன் டோர்னடோஸ் அணி இரண்டாமிடம் பிடித்தனர். சிறந்த அணிக்கான விருதை சென்னையை சேர்ந்த பிளிட்ஸ் அணி தட்டி சென்றது. பெண்கள் பிரிவில், சென்னையை சேர்ந்த புயல் அணியினர் முதலிடம், சென்னையை சேர்ந்த ஸ்டால் 7 அணி இரண்டாமிடம் பிடித்தது. சிறந்த அணிக்கான விருதை, ஆரோவில் கிராஷ் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை