கற்றலை எப்போதும் நிறுத்தக் கூடாது
கோவை : பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியின், 18வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் சிறப்பாக நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், பட்டங்கள் பெற்றுதுடன் கற்றலை நிறுத்தக் கூடாது, கற்றல் மற்றும் அதன் மூலம் வளர்ச்சியை எப்போதும் தொடர வேண்டும் என அறிவுறுத்தினார்.சிறப்பு விருந்தினர் கம்மின்ஸ் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமோலாளர் (பராமரிப்பு) பேசுகையில், ''வருங்கால தொழில்துறையின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, தங்கள் தனித்திறமைகளை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.தொடர்ந்து, 350க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பட்டங்களை வழங்கினார். சிறந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.விழாவில், எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குனர் அலமேலு, கல்லுாரியின் முதல்வர் டேவிட் ரத்தினராஜ் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.