அரசு பள்ளிக்கு புதிய கட்டடம் திறப்பு
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 220 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில், ஏ.கே.ஜி., தனியார் கம்பெனி சார்பில், சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக இரண்டு வகுப்பறைகளுடன் பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.இதை, அந்நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை இயக்குநர் (ஜெர்மன்) அஞ்ஜாப் பிளாட்டா அர்ப்பணித்தார். மேலும், நிர்வாக இயக்குனர் வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் செந்தில்குமார், ஆசிரியர்கள், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.