உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு கிலோ கோதுமை கூட கிடைப்பதில்லை; ரேஷன் கார்டுதாரர்கள் புகார்

ஒரு கிலோ கோதுமை கூட கிடைப்பதில்லை; ரேஷன் கார்டுதாரர்கள் புகார்

பொள்ளாச்சி; ரேஷனில் ஒரு கிலோ கோதுமை கூட கிடைப்பதில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், 11.48 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள், மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.இதில்,அரிசி, பச்சரிசி, கோதுமை ஆகிய மூன்றும், மத்திய அரசு மானியத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது.இலவசமாக வழங்கப்படும், 20 கிலோ அரிசிக்கு பதிலாக, 15 கிலோ அரிசியும், ஐந்து கிலோ கோதுமையும் வழங்க வேண்டும் என, நகரப்பகுதியில் வசிக்கும் கார்டுதாரர்கள், அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு, கார்டுதாரர்களின் கோரிக்கையை, இதுவரை பரிசீலிக்கவில்லை.இந்நிலையில், மாதம் ஒரு கிலோ கோதுமை கூட சரியாக கிடைப்பதில்லை என, ரேஷன் கார்டுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு மாதம், 925 டன் கோதுமை வழங்குகிறது. இதை வைத்து, 15 சதவீதம் கார்டுதாரர்களுக்கு கூட, ஒரு கிலோ கோதுமை வழங்க முடியாது.கிராம பகுதியில் வசிப்பவர்கள், கோதுமை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் நகர பகுதியில் வசிப்பவர்களுக்கு, ஒரு கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. அதிலும் ஒரு மாதம் வாங்கியவர்களுக்கு, அடுத்த மாதம் கிடைக்காது.கடந்த மாதம் வாங்காதவர்களுக்கு, இந்த மாதத்தில் கிடைக்கும். கோதுமை பற்றாக்குறை காரணமாக, இப்படி சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை