உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 3 கோடி அரசு நிலம் மீட்பு

ஆக்கிரமிக்கப்பட்ட ரூ. 3 கோடி அரசு நிலம் மீட்பு

போத்தனுார் : மலுமிச்சம்பட்டியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலம் மீட்கப்பட்டது.மலுமிச்சம்பட்டியில் தனியார் கல்லூரிக்கு செல்லும் சாலையில், க.ச. எண்.140ல் சுமார், 50 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதை அருகேயுள்ள தனியார் நிறுவனத்தார் ஆக்கிரமித்து, கம்பி வேலி அமைத்திருந்தனர்.இதை மீட்க கோரி சமூக ஆர்வலர் டேனியல், கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்தாண்டு மனு கொடுத்தார். அதனடிப்படையில் மதுக்கரை தாசில்தார் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு நிலம் குறித்த விபரங்களை கோட்டாட்சியருக்கு அனுப்பினார்.தொடர்ந்து நேற்று முன்தினம் நிலத்தை சுற்றி போடப்பட்டிருந்த கம்பி வேலி முற்றிலும் அகற்றப்பட்டது. இதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ