மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை
29-Aug-2024
நெகமம், : நெகமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் அன்னபூரணி, 70. இவர் சேலை வியாபாரம் செய்து வந்தார். காட்டம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், இரவு நேரத்தில் வீட்டின் உள் பகுதியில் தாளிட்டு இருந்துள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் கதவுகள் திறக்கப்படாத நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது.இதை கண்ட அருகில் உள்ள குடியிருப்புவாசிகள், நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி இறந்தது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
29-Aug-2024