உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்., சார்பில் ரூ.ஒரு கோடி நன்கொடை

கே.எம்.சி.எச்., சார்பில் ரூ.ஒரு கோடி நன்கொடை

கோவை : கே.எம்.சி.எச்., மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்தார்.இளைஞர் நலனுக்காகவும், விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் பலவிதமான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக, வாழ்த்திய டாக்டர் நல்ல பழனிசாமி, கே.எம்.சி.எச்., மற்றும் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனம் சார்பில், ரூ.ஒரு கோடி நன்கொடை வழங்கினார்.அப்போது அவர், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு, நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, கே.எம்.சி.எச்., மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி கார்த்திகேயன் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை