உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் ஓட்டு எண்ணும் பணிக்கு  இணைய வழியில் அலுவலர்கள் தேர்வு

கோவையில் ஓட்டு எண்ணும் பணிக்கு  இணைய வழியில் அலுவலர்கள் தேர்வு

கோவை: கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில், ஓட்டு எண்ணும் பணிக்கு இணைய வழியில், அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் நடக்கிறது. கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேபிளுக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் என மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வகையில், கோவை லோக்சபா தொகுதிக்கு, 363 அலுவலர்கள், பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு, 341 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, இன்று காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடக்கிறது.பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும் என்பதால், இணைய வழியில் அலுவலர்களை தேர்வு செய்யும் பணி, கோவை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான, டி.ஆர்.ஓ., ஷர்மிளா ஆகியோர் முன்னிலையில் நேற்றுமுன் தினம் நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஷ்ணுவர்த்தனி, நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தாசில்தார் தணிகைவேல் ஆகியோர் பங்கேற்றனர்.தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'ஓட்டு எண்ணும் மையத்தில், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில், எந்தெந்த அலுவலர், எந்தெந்த சட்டசபை தொகுதியில் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட வேண்டும் என, ஜூன் 4ம் தேதியன்று கம்ப்யூட்டர் உதவியுடன் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்