மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புபள்ளி திறப்பு
அன்னுார்:அன்னுாரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. நித்திலியம் சிறப்புப் பள்ளி (நிசார்க்) கோவை, கணபதியில், கடந்த எட்டு ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் அனனுார் அருகே சொக்கம்பாளையம், சரஸ்வதி நகரில், ஒரு ஏக்கரில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் வழிகாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஆட்டிசம், முதிர்ச்சி இல்லாமை, கற்றல் குறைபாடு ஆகியவை உள்ள குழந்தைகளுக்கு இங்கு கற்பிக்கப்பட உள்ளது.கோவை கலெக்டர் கிராந்தி குமார் பள்ளியை திறந்து வைத்தார். சக்தி மசாலா நிறுவன உரிமையாளர்கள் துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். நிர்வாக அறங்காவலர்கள் சம்பத்குமார், காயத்ரி சம்பத் முன்னிலை வகித்தனர்.பள்ளிக்கு ஒரு ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய பினவலன்ஸ் பள்ளி தாளாளர் ராஜேந்திரன், பயனீர் ஸ்டில்ஸ் இயக்குனர் பாலாஜி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.நிகழ்ச்சியில், அறங்காவலர்கள் அருள் செல்வம், யாமினி, ஈஸ்வரமூர்த்தி, தீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.