உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை அரசு பொருட்காட்சியில் நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு 

மதுரை அரசு பொருட்காட்சியில் நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு 

பொள்ளாச்சி : கோவை நாடக கலைக்கழகத்தினரின் நிகழ்ச்சி மதுரையில் நடக்கும் அரசு பொருட்காட்சியில் இடம் பெறுகிறது. கோவை மாவட்ட நாடகக் கலைக் கழகம் வாயிலாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், ஊட்டியில் நடந்த மலர்க்கண்காட்சியில், 20 ஆண்டுகளுக்குப் பின், இந்த நாடகக் கலைக் கழகத்தினரின் நிகழ்ச்சிக்கு, அரசால் அனுமதி அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, தற்போது, ஜூலை 1ம் தேதி, மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் அரசு பொருட்காட்சியிலும், வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்ட நாடகக் கலைக் கழக நிறுவனர் சண்முகவடிவேல் மற்றும் நாடகக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ