உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு

தரமற்ற வீடு கட்டியதால் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை; ரியல் எஸ்டேட் நிறுவனம் கட்டிய வீடு தரமற்றதாக இருந்ததால், இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது. சூலுார் அருகேயுள்ள குமாரபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். மத்திய பாதுகாப்பு படை வீரரான இவர், அதே பகுதியில், வீடு கட்டுவதற்காக, குமார் என்பவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். மொத்தம், 787 சதுர அடி வீட்டிற்கு, மனையுடன் சேர்த்து, 26 லட்சம் ரூபாய்க்கு, வங்கி கடன் பெற்று கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்தார். பணிகள் முடிந்த பிறகு, 2021, ஜன., 27ல் குடியேறினார். அப்போது, வீடு தரமற்றதாக இருந்தது தெரிய வந்தது. சுவரில் விரிசல் ஏற்பட்டதோடு, டைல்ஸ் தரையில் அமுங்கியது. இது குறித்து, கட்டுமான நிறுவன உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை.இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'கட்டுமான நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு 3.80 லட்சம் ரூபாய் திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை