உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யணும்

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யணும்

கோவை : தேர்தலில் அளித்த வாக்குறுதி படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், 2012ம் ஆண்டு அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் 12 நாட்கள் பணிபுரியும் வகையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்துக்கு பணி செய்து வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் தி.மு.க., ஆட்சிக்கு வந்த, 100 நாட்களில் பகுதிநேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்வதாக, வாக்குறுதி கொடுத்தார். இப்போது தி.மு.க., ஆட்சியில் உள்ளது. இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், 2500 ரூபாய் சம்பள உயர்வும், ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடும் வழங்கப்படும் என, அறிவிப்பை வெளியிட்டார். மருத்துவ காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. மருத்துவ காப்பீடு தொடர்பாக, உடனே அரசாணை வெளியிட வேண்டும்.கடந்த, 13 ஆண்டுகளாக, குறைந்த சம்பளத்துக்கு பணி புரிந்து வருவதால், பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.முதல்வர் அளித்த வாக்குறுதிபடி, பகுதிநேர ஆசிரியர்களின் பணியை முறைப்படுத்தி, காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை