உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் அமைக்க பயணியர் கோரிக்கை

ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கிங் அமைக்க பயணியர் கோரிக்கை

கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் அமைக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில், பயணியர் பலர் வாகனங்களை ரயில்வே ஸ்டேஷன் கீழ்பகுதியில் உள்ள இடத்தில் நிறுத்தி செல்கின்றனர்.இந்த 'பார்க்கிங்' ஏரியாவில், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன், மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருடிய சம்பவம் அரங்கேறியது.இதைத்தொடர்ந்து, இப்பகுதியில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டுமெனவும், ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உரிய 'பார்க்கிங்' வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென, பயணியர் வலியுறுத்துகின்றனர்.இதே போன்று, ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே, கரடு முரடான மண் ரோடு உள்ளது. இந்த வழித்தடத்தை நிரந்தரமாக அடைக்க வேண்டும். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் இரவு நேரம் மற்றும் அதிகாலையில் ரயில் வரும் போது, ரயில்வே ரோட்டில் இருட்டு காரணமாக பயணியர் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, உயர் கோபுரமின்விளக்கு அமைக்க வேண்டும், என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, எம்.எல்.ஏ., தாமோதரன் கூறுகையில், ''ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில், மின்விளக்கு அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியில், எம்.எல்.ஏ., நிதியில் இருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க சாத்திய கூறுகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ