உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் கடைகளில் அரிசி கையிருப்புக்கு அபராதம் ரத்து

ரேஷன் கடைகளில் அரிசி கையிருப்புக்கு அபராதம் ரத்து

கோவை;ரேஷன் கடைகளில் கையிருப்பு வைக்கப்படும் ரேஷன் அரிசிக்கு, அபராதம் விதிக்கும் நடைமுறையை, தமிழக அரசு ரத்து செய்துள்ளது.இதுகுறித்து, தமிழக அரசு ரேஷன்கடை பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது:ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி, ரேஷன் கார்டுதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் இருப்பு வைக்கப்படுகிறது. இருப்பு வைக்கப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்ப, பி.ஓ.எஸ்., இயந்திரத்தில் ஒவ்வொரு பொருட்களுக்கும், தனித்தனியாக பதிவு மேற்கொள்ளப்படுகிறது. புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி ஆகியவற்றிற்கு இருப்பு அதிகம், குறைவு என இரண்டுக்கும் தனித்தனியாக அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இதை தவிர்க்க, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்து, அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை