மேலும் செய்திகள்
வேகத்தடை உள்ள சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி
03-Feb-2025
அன்னுார்அன்னுார் - மேட்டுப்பாளையம் சாலையில், தீயணைப்பு நிலையம் எதிரே கற்பக விநாயகர் நகர் உள்ளது. இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளது. ஒட்டர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த இந்நகரில் 100 அடிக்கு ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அதிக வேகத்தடையால், பள்ளி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். தேவைப்படும் இடம் மற்றும் வளைவு உள்ள இடத்தில் மட்டும் வேகத்தடை அமைத்து, மற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.
03-Feb-2025