உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் பெரியகுளம் தூர்வாரும் பணி துவக்கம்

பேரூர் பெரியகுளம் தூர்வாரும் பணி துவக்கம்

தொண்டாமுத்தூர்;பேரூர் பெரிய குளம் வறண்டுள்ளதால், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யாததாலும், கோடை வெயிலின் தாக்கத்தாலும், நொய்யல் ஆறு வறண்டது. அதனால், நொய்யல் ஆற்றை ஆதாரமாக கொண்டுள்ள குளங்களும் வறண்டுள்ளது.கடந்த, ஒருவாரமாக, இரவு நேரங்களில் மட்டும் சாரல் மழை பெய்துவருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள குளங்களில் ஒன்றான பேரூர் பெரிய குளத்தில், தற்போது, தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்திற்கு முன் முழுமையாக தூர்வாரினால், மழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியும்.பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பேரூர் பெரிய குளத்தில், நீர் இல்லாததால், அதனை தூர்வார கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். தற்போது, 2 அடி மட்டுமே தூர்வாரப்படுகிறது. அந்த மண், விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். நாங்களும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை