சுற்று சூழல் காக்க மரக்கன்று நடவு
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தால் அதிக காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதாரம் அருகே, 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இதில், மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அருணா, வட்டார மருத்துவ அலுவலர் அக்னீஸ் கோல்டா பிரியதர்ஷினி மற்றும் சொக்கனூர், நல்லட்டிபாளையம், வடசித்தூர் சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.