உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ வழக்கு- ஆனைமலை சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

போக்சோ வழக்கு- ஆனைமலை சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

கோவை; போக்சோ வழக்கில், சிறுவனுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை சிறார் சிறப்பு நீதிமன்றத்தில், தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், ஆனைமலை பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக, 2022ல் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாரால், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட இவர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவையிலுள்ள சிறார் நீதிமன்றத்தில், விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ