உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைமறைவு குற்றவாளியை அசாம் சென்று பிடித்த போலீசார்

தலைமறைவு குற்றவாளியை அசாம் சென்று பிடித்த போலீசார்

கோவை : மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருடனை, கோவை ரயில்வே போலீசார் அசாம் சென்று, கைது செய்தனர்.பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்வப்னா, 44. இவர், 2022ம் ஆண்டு டிச., மாதம் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் சென்றார். ரயில் கோவை அருகே வந்து கொண்டிருந்த போது, அவரது ஹேண்ட்பேக் மாயமானது.அதில், 128 கிராம் தங்க நகைகள், 2 மொபைல் போன் உள்ளிட்ட ரூ. 2.59 லட்சம் மதிப்பிலான பொருட்கள் இருந்தன.ஸ்வப்னா கோவை ரயில்வே போலீசில் புகார் அளித்தார்.ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அசாம் மாநிலத்தை சேர்ந்த சதாம் உசைன், 29 என்பவர் ஹேண்ட்பேக்கை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 120 கிராம் தங்கக்கட்டி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதன் பின், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார்.கோர்ட் பிடியாணை வழங்கி, கைது செய்ய உத்தரவிட்டது. போலீசார் அவரை கைது செய்ய, நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.அசாம் மாநிலம், ஹோஜாய் என்ற இடத்தில் சதாம் உசைன் இருப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் அசாம் சென்று, அங்கு ஒரு வாரம் தங்கி அவரை தேடிப்பிடித்து கைது செய்தனர். அசாம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ