உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமையலர் தற்கொலை போலீசார் விசாரணை

சமையலர் தற்கொலை போலீசார் விசாரணை

வால்பாறை ;வால்பாறையில், சத்துணவு திட்ட சமையலர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வால்பாறை அடுத்துள்ள கல்யாணப்பந்தல் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி லதா, 51. இவர், லோயர் ேஷக்கல்முடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தார்.இவரது, இரண்டு மகள்களுக்கும், மகனுக்கும் திருமணமான நிலையில், தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பாலன் ஏற்கனவே இறந்து விட்டதால், மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் லதா சிரமப்பட்டார்.கடன் தொல்லையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான லதா, வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ேஷக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ