உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா

சோமனுார்: ராமாச்சியம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில், பூச்சாட்டு விழாவை ஒட்டி விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டது.சோமனுார் அடுத்த ராமாச்சியம் பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோவிலில், பொங்கல் விழா கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 25ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டது. தினமும் காலை, 5:00 மணிக்கு, விநாயகர் மற்றும் மாகாளியம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடக்கிறது.பக்தர்கள் பூவோடு எடுத்து கம்பம் சுற்றி ஆடும் நிகழ்வு நடந்து வருகிறது. நேற்று காலை விநாயகர் பொங்கல் வைக்கப்பட்டன. இன்று படைக்கலம் எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. மாவிளக்கு ஊர்வலம் மற்றும் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை பொங்கல் விழா நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ