உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனிப்பயனாக்கப்பட்ட ‘செக் புக்’ தபால்துறை அறிமுகம்

தனிப்பயனாக்கப்பட்ட ‘செக் புக்’ தபால்துறை அறிமுகம்

கோவை: தபால் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட காசோலைப் புத்தக  வசதியை தபால்துறை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.  கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண் மற்றும் தபால் துறையின்  ஐ.எப்.எஸ்.சி., ஆகியவை காசோலையில் முன்பே அச்சிடப்பட்டிருக்கும்.  வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் சேவை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இவ்வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் தனிப்பயனாக்கப்பட்ட காசோலை வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்படும். தற்போதுள்ள உடனடி காசோலைப் புத்தக வசதியும் தபால் அலுவலக கவுன்டர்களில் தொடர்ந்து கிடைக்கும் என கோவை கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் நந்தா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி