உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் நிலையத்தில் பவர் கட்; பயணியர் அவதி

ரயில் நிலையத்தில் பவர் கட்; பயணியர் அவதி

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் ஏற்பட்ட மின்வெட்டால், பயணியர் அவதிக்குள்ளாயினர்.கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே சங்கத்தின் சார்பில், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் மின்வாரியத்தினர் வரவில்லை.இதனால், இரவு நேரத்தில் ரயில்வே ஸ்டேஷன் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. ரயில் பயணியர் பலர் தடுமாறி நடந்து சென்றனர். மேலும், சிலர் மொபைல்போன் டார்ச்லைட் பயன்படுத்தி செல்லும் நிலை ஏற்பட்டது.கிணத்துக்கடவு ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கும், மெயின் ரோட்டிற்கும் 500 மீட்டர் தூரம் உள்ளது. மின்வெட்டு ஏற்பட்டவுடன் தகவல் தெரிவித்தும், அதை சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டதால், பயணியர் பலர், லக்கேஜ் எடுத்து செல்வதற்கும், நடைமேடையை கடப்பதற்கும் சிரமப்பட்டனர். இரவு, 10:00 மணிக்கு பின், மின் வினியோகம் செய்யப்பட்டது,' என்றனர்.மின் வாரியத்தினர் கூறுகையில், 'விடுமுறை நாளில் எதிர்பாராதவிதமாக மின்வெட்டு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் மாலை 6:00 மணிக்கு கிடைத்தது. பணியாளர்களும் வெளியூர் சென்றிருந்தனர். மாற்று பணியாளர்களை வரவழைத்து, மின்வெட்டு பிரச்னை சரி செய்யப்பட்டது,' என்றனர்.

இதையும் கவனியுங்க!

கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷனில் நாள்தோறும் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இதில், இரவு நேர பயணம் செய்பவர்கள் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் ரயில் பயணியர் அதிக அளவு வந்து செல்கின்றனர்.பெரும்பாலானோர், ரயில் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே இங்கு வருவதால், இரவு நேரத்தில் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். மற்றும் உடைமைகளை சரிபார்க்கின்றனர். இந்நிலையில், நடைமேடை மின்விளக்குகள் எரியாததால், பயணியர் சிரமப்படுகின்றனர். ரயிலில் இருந்து இறங்கி செல்லும் பயணியர் லக்கேஜ் உடன் செல்லும் போது தடுமாறி விழுகின்றனர்.பயணியர் நலன் கருதி, நடைமேடையில் மின்விளக்குகள் எரிவதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kundalakesi
செப் 17, 2024 12:19

செப் 16 மதுக்கரை புகை வண்டி நிலையத்திலும் இரவு 7 மணிக்கு மின் வெட்டு. என்ன தான் நடக்குது


சமீபத்திய செய்தி