மேலும் செய்திகள்
'கோவில் வேலி சேதம்; பின்னணியில் சதித்திட்டம்'
06-Aug-2024
பொள்ளாச்சி: இலங்கை தமிழர்களுக்கும் அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகே, ஆழியார் நகர், எல்.எப்., காலனியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு, 30க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசிக்கின்றனர். இந்நிலையில், அவர்களுக்கும், அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, சப்-கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், கடந்த 30 ஆண்டுகளாக வசிக்கிறோம். தற்போதுள்ள வீடுகள் சிதிலமடைந்து உள்ளது. அருகே மரங்கள் இருப்பதால், மழை, காற்றின் போது, மரக்கிளைகள் விழுந்து, ஆபத்து ஏற்படுகிறது.கனமழை பெய்தால், வீடுகள் இடிந்து விடும். பெண்கள், குழந்தைகள் உள்ளதால் பலரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறோம். அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தை இலங்கை தமிழர்களுக்கும் செயல்படுத்த வேண்டும். பலமுறை மனு அளித்தும், எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
06-Aug-2024