உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே கேட் இன்று அடைப்பு

ரயில்வே கேட் இன்று அடைப்பு

மேட்டுப்பாளையம்; தோலம்பாளையம் ரயில்வே கேட், பராமரிப்பு பணிகளுக்காக இன்று (5ம் தேதி) இரவு அடைக்கப்படுகிறது. காரமடையில் தோலம்பாளையம் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக தோலம்பாளையம், வெள்ளியங்காடு, பில்லுார் அணை, மஞ்சூர், தாயனுார், கோப்பனாரி, மருதுார் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில், ரயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர். ரயில்வே கேட் அவசர பராமரிப்பு பணிகளுக்காக, ரயில்வே நிர்வாகம் இன்று (5ம் தேதி) இரவு, 9:00 மணியிலிருந்து, 6ம் தேதி காலை, 9:00 மணி வரை கேட்டை மூடி வைக்க முடிவு செய்துள்ளது. அதனால் பொதுமக்கள் இந்த நேரத்தில், மாற்றுப் பாதையை பயன்படுத்தும் படி, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை