உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்;  இருவரை கைது செய்த ரயில்வே போலீசார்

ரயில் தண்டவாளத்தில் சிமென்ட் சிலாப்;  இருவரை கைது செய்த ரயில்வே போலீசார்

கோவை; சிங்காநல்லுார் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தில், 'சிமென்ட் சிலாப்' வைத்த இருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.கோவை, இருகூர் - பீளமேடு இடையே ரயில் தண்டவாளத்தில் கடந்த 10ம் தேதி இரவு திருப்பதி - கோவை எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் ரயில் தண்டவாளத்தில், பெரிய 'சிமென்ட் சிலாப்' வைக்கப்பட்டிருந்ததை பார்த்தார். இது குறித்து, சேலம் கோட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர், தண்டவாளத்தில் இருந்த 'சிலாப்பை' அகற்றினர். ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் இருந்த 30க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு நபர் அப்பகுதியில், இரண்டு மூன்று முறை சென்று வருவது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில், அந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது, தண்டவாளத்தில் 'சிமென்ட் சிலாப்'பை வைத்தது, கோவை தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி, 48 மற்றும் அவரது நண்பர் நீலகிரி மாவட்டம் கோடநாட்டை சேர்ந்த விஜய், 34 என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர்.போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் இரும்பு கடையில் வேலை செய்து வருவதும், மது போதையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த போது, இவ்வாறு செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

enkeyem
மார் 13, 2025 11:37

பயணியர் ரயில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டால் மத்திய அரசு மீது தான் பழி சுமத்துவார்கள். குடிகாரர்கள் மீதும் குடியை டார்கெட் வைத்து விற்கும் மாநில அரசையும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள்