உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரம்ஜான் நோன்பு; மாலையில் கஞ்சி வினியோகம்

ரம்ஜான் நோன்பு; மாலையில் கஞ்சி வினியோகம்

கோவை : ரம்ஜான் பண்டிகை நோன்பு நேற்று துவங்கிய நிலையில், மாலையில் இஸ்லாமியருக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது.ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலை பிறை தென்பட்டதால், நேற்று முதல் நோன்பு அனுசரிக்கப்படும் என்று, தலைமை ஹாஜி அறிவித்தார்.இஸ்லாமிய சகோதரர்களின், ஐந்து பெரும் கடமைகளில் நோன்பு இருத்தல் முக்கியமான கடமையாகும். கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலை, சிறப்பு வழிபாடு நடத்திய பொதுமக்கள், நோன்பை கடைபிடிக்கத் துவங்கினர்.நேற்று முதல், 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிப்பர். அதன்பின், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். சூரியன் மறைவுக்குப் பிறகு, நோன்பை முடித்துக்கொள்ளும் மக்களுக்கு, நோன்புக்கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில், உக்கடம் அல் அமீன் காலனி சுன்னத் ஜமாத் பள்ளி வாசலில், பொதுமக்களுக்கு நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ