மேலும் செய்திகள்
19 இடங்களில் நாளை ரேஷன் குறைதீர் முகாம்
07-Feb-2025
சூலுார்: தாலுகா அலுவலகங்களில் இன்று ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, ரேஷன் கார்டு குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கும் முகாமில் பஙகேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ரேஷன் கார்டு நகல், செல்போன் எண் மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மனுக்களை அளித்து தீர்வு காணலாம்.
07-Feb-2025