உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உறுப்பினர் சேர்க்கும் பணி; பா.ஜ.,வினர் தீவிரம்

உறுப்பினர் சேர்க்கும் பணி; பா.ஜ.,வினர் தீவிரம்

சூலுார் : சூலுார் வட்டாரத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியில் பா.ஜ., வினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பா.ஜ.,வில் உறுப்பினர் சேர்க்கும் பணி கடந்த, 1ம்தேதி முதல் துவங்கியது. மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கும் பணியை பா.ஜ., வினர் சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த, 3ம் தேதி முதல் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள், பதிவை புதுப்பித்து வருகின்றனர். புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில், வார்டு வாரியாக களம் இறங்கியுள்ள நிர்வாகிகள், இளைஞர்கள் மற்றும் புதியவர்களை கட்சியில் உறுப்பினராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பூத்துக்கு, 50 பேரை கட்சியில் சேர்க்கும் இலக்குடன் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ