உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்

தரைமட்ட பாலத்தின் அருகே பள்ளத்தால் விபத்து அபாயம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலக ரோட்டில், தரைமட்ட பாலத்தின் அருகே பெரிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் இருந்து, மரப்பேட்டை நுாலகம், கந்தசாமி பூங்கா வழியாக நகர குடியிருப்பு பகுதிகள், கோட்டூர், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.தினமும், 200க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ரோட்டில், மரப்பேட்டை நுாலகம் அருகே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. அதன் அருகே பெரிய பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி - உடுமலை ரோடு மரப்பேட்டை நுாலகம் அருகே, தரைமட்ட பாலத்தையொட்டி கழிவுநீர் கால்வாயில் பெரிய பள்ளம் உள்ளது. ரோடு திரும்பும் இடத்தில் உள்ள பள்ளத்தால், வாகன ஓட்டுநர்கள் கவனமின்றி வந்தால், சாக்கடை கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, குழியை சீரமைக்க முன்வர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ