உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விற்பனை படுஜோர்

இளநீர் விற்பனை படுஜோர்

மேட்டுப்பாளையம், ; சுட்டெரிக்கும் வெயிலால் மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் பகல் நேரங்களில் குறிப்பாக மதிய நேரத்தில் வெளியே வருவதற்கு அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வந்து செல்கின்றனர்.வெயிலை தணிக்க பொதுமக்கள் சாலையோர இளநீர் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. இளநீர் ஒன்று ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் இளநீர் விலை மேலும் உயரும், தட்டுப்பாடு ஏற்படும் என இளநீர் வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி