உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கரா கல்லுாரியில் மாணவர் சங்க தேர்தல்

சங்கரா கல்லுாரியில் மாணவர் சங்க தேர்தல்

கோவை:சரவணம்பட்டி, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில், சங்கரா மாணவர் கழகத்தின் சார்பில், 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சங்கத் தேர்தல் நடந்தது.பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 20 மாணவ வேட்பாளர்கள் உற்சாகமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். ஓட்டுப்பதிவுக்கென, பிரத்யேக சாப்ட்வேர் உருவாக்கப்பட்டிருந்தது. எட்டுக்கும் மேற்பட்ட சாவடிகளில், காலை 10:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர். அனைவருக்கும் விரலில் மை வைக்கப்பட்டது. சங்கரா கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் ராமச்சந்திரன், செயலர் சந்தியா, துணை இணைச் செயலர் நித்யா மற்றும் அறங்காவலர்கள், ஆசிரியர்கள் கண்காணித்தனர்.தேர்தல் தலைவராக அனுஷா, துணைத் தலைவராக ரகு, செயலாளராக தாரணி பிரியா, இணைச் செயலாளராக ஸ்ருதி, கலாசாரச் செயலாளராக ருத்ரா மற்றும் விளையாட்டுச் செயலாளராக ஆஷா போஷ்லின் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ வேட்பாளர்கள் பதவியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ