உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆராய்ச்சிக்கு உதவித்தொகை கே.பி.ஆர்.,கல்லுாரி அறிவிப்பு 

ஆராய்ச்சிக்கு உதவித்தொகை கே.பி.ஆர்.,கல்லுாரி அறிவிப்பு 

கோவை:கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'கே.பி.ஆர்., பிரைடு பெல்லோஷிப்' ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை, கல்லுாரி முதன்மை இயக்குனர் அனந்தகிருஷ்ணன் அறிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: நாடு முழுவதும், 1,170 பல்கலைகள், 45,000 கல்லுாரிகள் இருந்தும், முதுகலையில் மாணவர் சேர்க்கை, 12.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்க, கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு, கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும், முதுநிலை பட்ட ஆராய்ச்சியாளருக்கு 12,000 ரூபாயும், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு 20 ஆயிரம் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரையும், மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு பெறும் மாணவர்கள், கல்லுாரி ஆராய்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் கட்டுப்பாடின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.இவ்வாறு, அவர் கூறினார். இத்திட்டத்தின் கீழ், முனைவர் பட்ட படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் உருவாகும் என, கல்லுாரி முதல்வர் சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை