உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்கள்

புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவர்கள்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் இ.எம்.எஸ்., திருமண மண்டபத்தில், புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.அதன் நிர்வாகிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு உண்டியல் கொடுத்தனர். அதில் சேமிக்கும் பணத்தை வைத்து புத்தகங்கள் வாங்கும் படி ஆசிரியர்கள் கூறினர். அதன்படி காந்திநகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள், புத்தகத் திருவிழாவில் பங்கேற்று, உண்டியல்களில் சேமித்து வைத்த தொகைக்கு ஏற்றார் போல் புத்தகங்களை வாங்கினர். நகராட்சி ஊழியர் ஜெயராமன் ஏற்பாடு செய்த தனியார் வாகனத்தின் வாயிலாக, மாணவர்களையும் பள்ளி தலைமை ஆசிரியை புனித செல்வி, ஆசிரியர்களையும் புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ