உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில், கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், சுத்தம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளன்றே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் அரசு வழங்கும் வண்ணப்பென்சில், கணிதப்பெட்டி உபகரணங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, பள்ளிகளில் இறைவணக்கக்கூட்டம் முடிந்ததும், பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வகுப்புக்கு செல்ல ஏற்பாடு செய்யவும் தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பள்ளிகளில், கடந்த ஒரு வாரமாக, துாய்மைப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அவ்வகையில், தேவையற்ற பொருட்கள் மற்றும் காகிதங்கள் அகற்றம் செய்யப்பட்டது. வளாகத்திற்குள், புதர்கள் மற்றும் களைச் செடிகள் அகற்றப்பட்டன. மேலும், வகுப்பறைகள், கழிவறைகள் என, அனைத்து அறைகளும் சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. புதிய வகுப்புக்கு முன்னேறிய மாணவர்கள், உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை புரிவர்.

உடுமலை

உடுமலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூறியதாவது: குழந்தைகள் முதல் முதலாக பள்ளிக்குள் நுழையும் போது, அவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் சூழலாக பள்ளிகள் இருக்க வேண்டும். இவ்வாறு புதுமையான முறையில் வரவேற்பதால், பள்ளி சூழல் இனிமையானதாக மாறும்.மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பதில் இவை அனைத்துமே முதன்மையாக உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் இதனை செயல்படுத்த, குறிப்பாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, முதல் நாள் வரவேற்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்