உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு எண்ணும் மையத்தில் இருப்பு அறைக்கு சீல்

ஓட்டு எண்ணும் மையத்தில் இருப்பு அறைக்கு சீல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில், பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டன.தேர்தல் பார்வையாளர் (பொது) அனுராக் சவுத்ரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா ஆகியோர் பார்வையிட்டனர். அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை கதவு பூட்டப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ