உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய வாட்டர்போலோ நீச்சல் போட்டிக்கு தேர்வு

தேசிய வாட்டர்போலோ நீச்சல் போட்டிக்கு தேர்வு

பொள்ளாச்சி;கேரளாவில் நடக்கும் தேசிய அளவிலான வாட்டர் போலோ நீச்சல் போட்டியில் பங்கேற்க பொள்ளாச்சியைச் சேர்ந்த வீரர்களும் தகுதிபெற்றுள்ளனர்.கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், வரும், 18ல், 'நேஷனல் அக்குவாடிக் சாம்பியன்ஷிப்' எனும் வாட்டர் போலோ நீச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டியில், ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்த அணி வீரர், வீராங்கனையர் கலந்து கொள்ள உள்ளனர்.அதன்படி, தமிழக அணி சார்பில் 13 வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களில் மூன்று பேர், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி மற்றும் பி.ஏ., பள்ளியைச் சேர்ந்தவர்கள்.பொள்ளாச்சி நீச்சல் பயிற்சியாளர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரி முதலாமாண்டு பிரநித், பி.ஏ., பள்ளி ரித்தன்நிதீஷ் மற்றும் மித்ரஸ்ரீயா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இவர்கள், போட்டியில் வெற்றி பெறும் வகையில், தொடர்ந்து தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ